×

ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம்

காரிமங்கலம், பிப்.28: பாலக்கோட்டை அடுத்த மாதம்பட்டியில் இயங்கி செயல்பட்டு வரும், ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில், கல்லூரி நிர்வாகம், பாலக்கோடு அரிமா சங்கம் மற்றும் சேலம் சிவராம்ஜி ரத்த வங்கி சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. ஸ்ரீ மூகாம்பிகை, ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்து பேசினார். கல்லூரி செயலாளர் மதன்மோகன் அனைவரையும் வரவேற்றார்.

லட்சுமி சரஸ்வதி அறக்கட்டளை செயல் இயக்குநர் மாதுலம்பூ, பாலக்கோடு அரிமா சங்க தலைவர் சிவாஜி, முதல்உதவி தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் முத்து, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முகாமில் கல்லூரி செயலாளர் மதன்மோகன், அரிமா சங்க தலைவர் சிவாஜி மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்பட பலர் ரத்த தானம் செய்தனர். கல்லூரி முதல்வர் சிவகுமார் நன்றி கூறினார்.

Tags : camp ,
× RELATED உத்தமபாளையம் வட்டாரத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்